November 22, 2024

கோத்தா பிம்பம் போலி: புரியாத சிங்களம்!

கோத்தா அரசு தொடர்பிலான மாயையிலிருந்து தென்னிலங்கை விடுபடாத வரை ஏதுமே நடக்கப்போவதில்லையென்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இலங்கை ஒரு நாடு என்கிற ரீதியில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள்  இலங்கை சிக்கி கொண்டு இருக்கிறது . அரசாங்க மொத்த பொது கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86.8 % வீதமாக அதிகரித்து இருக்கிறது. அத்துடன் கடந்த சில மாதங்களில் இலங்கை அரசாங்கத்தின் கடன் 8.3 % அதிகரித்து 13.031 ரில்லியன் ஆக உயர்ந்து இருக்கிறது. அதே நேரம் இலங்கை அரசாங்கம் அடுத்து வரும் மார்கழி மாத முடிவிற்குள் USD 3.2 billion பெறுமதியான கடன்களை மீள செலுத்த வேண்டி இருக்கிறது . இதற்க்கு இடையில் இலங்கை அரசாங்கம் சீனா அரசாங்கத்திடம் இருந்து 800 மில்லியன் டொலர் Swap Line உதவிகளையும் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து 400 மில்லியன் Swap Line உதவிகளையும் எதிர்பார்த்து இருக்கிறது.
 
இந்த நெருக்கடிக்குள் உள்நாட்டில் மக்க்களின் நாளாந்த வாழ்க்கைக்கு அவசியமான மரக்கறி உட்பட்ட பொருட்களின் விலைகள் கட்டுப்பாடு இன்றி தளம்பி வருகின்றன அந்த வகையில் நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி இலங்கையின் பிரதான பொது சந்தைகளை (தம்புள்ளை, Narahenpita மற்றும் Pettah ) அடிப்படையாக கொண்டு வெளியிட்ட மரக்கறி உட்பட்ட பொருட்களின் நாளாந்த விலை பட்டியல்
1. 1 Kg கேரட் : 180 ரூபா
2. 1 Kg Beans : 200 ரூபா
3. 1 Kg தக்காளிப்பழம் : 170 ரூபா
4. 1 Kg கத்தரிக்காய் : 190 ரூபா
5. 1 Kg கோவா :180 ரூபா
6. 1 Kg புடலங்காய் : 200 ரூபா
5. 1 Kg சிவப்பு சின்ன வெங்காயம் : 340 ரூபா
6. 1 Kg உருளை கிழங்கு : 220 ரூபா
7. 1 Kg செத்தல் மிளகாய் : 500 ரூபா
8. 1 தேங்காய் : 80 ரூபா
9. 1 Kg தேங்காய் எண்ணெய் : 520 ரூபா
10. 1 Kg பருப்பு : 170 ரூபா
11. 1 Kg சீனி : 140 ரூபா
12 1 முட்டை : 19 ரூபா
13. 1 Kg பச்சை மிளகாய் : 360 ரூபா
14. 1 Kg தேசிக்காய் : 650 ரூபா
இலங்கையின் தொழில்படையில் உள்ள மக்களில் சுய தொழிலை நம்பி இருந்த 47 லட்சம் மக்கள் தங்களது வருமானங்களை முழுமையாக இழந்து நெருக்கடிகளை எதிர் கொள்ளும் இந்த COVID 19 காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் தடுமாற்றங்களால் ஏற்பட்டு இருக்கும் விலைவாசி உட்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளை அப்பாவி பொது மக்கள் சுமக்க வேண்டி இருப்பது துயரமானது
ராஜபக்சே குடும்பம் தவறான அரசியல் தீர்மானங்கள் , இராணுவமயமாக்கல் , பொருளாதார ரீதியான தடுமாற்றங்கள் , சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதம் / மத வாதம் என அக்கிரமங்களை செய்தபடி விகாரைகளில் புத்த பிக்குகளின் காலில் வீழ்ந்து கிடைப்பதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்