ஊரடங்கை தளர்த்தியதின் விளைவு… பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் வைரஸை மற்றவர்களுக்கு பரப்பும் எண்ணிக்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் R-எண் பிரித்தானியாவின் வடமேற்கில் ஒன்றுக்கு மேல் உயர்ந்துள்ளது என கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பயோஸ்டாடிஸ்டிக்ஸ் யூனிட் மற்றும் பிரித்தானியா பொது சுகாதாரம் ஆகியவற்றின் கூட்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
R-எண் பிரித்தானியாவின் தென்மேற்கில் ஒன்றாக உள்ளது, ஆனால் தினசரி பிராந்தியத்தில் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது
அனைத்து பிராந்தியங்களிலும் R-எண் உயர்ந்துள்ளது என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன, வீடுகள் மற்றும் பொது மற்றும் பணியிட அமைப்புகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து கலப்பதன் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிராந்திய R-எண் பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் 1-க்குக் கீழே இருந்தாலும் அவை அதிகரித்துள்ளன என்பதை எங்கள் மதிப்பீடுகள் காட்டுகின்றன.
ஊரடங்கை தளர்த்தி வரும் நிலையில் இது எதிர்பார்க்கப்பட்டது தான். எல்லோரும் சமூக இடைவெளியை தொடர்வது மிக முக்கியம், நல்ல கை சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், மேலும் வீட்டிலேயே இருக்க வேண்டும் மற்றும் அறிகுறிகள் இருந்தால் சோதனை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா பொது சுகாதார மருத்துவ இயக்குநர் தலைவர் யுவோன் டாய்ல் கூறினார்.