ஆட்டக்களத்தில் ஆவிகள்.


எங்கும்
எதிலும்
தாமே என
தம்பட்டம்…
வீரம்
தீரம்
விஞ்ஞானம்
அறிவு ஆற்றலென
ஆர்ப்பாட்டம்.
முன்னிலை
நாடாக்கி
முழு உலகையும்
அடிமையாக்கி
ஆடிய வல்லரசு
திண்டாட்டம்..
நாட்டுக்கு
வெற்றிகளையும்
புகழையும்
ஈட்டி பெருமை
சேர்த்தோரை
நிற வெறியால்
சதிராட்டம்..
பாரெல்லாம்
புறம் கூறி
அறம் மறந்த
செயல் யாவும்
கண்டண குரலாய்
போராட்டம்.
உலகில்
உங்களால்
உயிர் நீத்த
ஆன்மாக்களின்
ஆட்டம் ஆரம்பம்.
நிற வெறியிலும்
இன அழிப்பிலும்
பயங்கரவாத பட்டியலிலும்
முன்னிலையில் நீங்களே
ஆட்டக் களத்தில்
ஆவிகள் ஆடிப்பாருங்கள்
வலிகளே வாஞ்சையாகும்.