890 மில்லியனை கழுவி சென்ற கடல்?
இரத்மலானையில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையை புனரமைக்கும் திட்டத்தின் பகுதியாக கடல் அரிப்பால் சேதமடைந்த கல்கிஸ்சை கடற்கரையை 890 மில்லியன் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் நிறைவடைந்தது.
எனினும் கல்கிஸ்சை கடற்கரை மீண்டும் கடல் அரிப்புக்கு உள்ளாக ஆரம்பித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் நிரப்பபட்ட மணல் கடல் அலையில் அரித்து செல்லப்பட்டுள்ளது.
இதற்கு 890 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்திற்குள் கல்கிஸ்சை கடற்கரை பழைய நிலைமைய அடைந்துள்ளது. கொழும்பு – மாத்தறை ரயில் பாதை கடல் அரிப்புக்கு உள்ளாகும் அச்சுறுத்தலுக்கு தீர்வாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது