இலங்கையில் தேரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
மாளிகாவத்தை – போதிராஜாராம விகாரையின் தலைமை பிக்கு ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் ஆயுதம் மற்றும் குண்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காகவே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிவருவதாவது,
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் மாளிகாவத்தை, போதிராஜாராம விகாரையில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் விகாராதிபதி உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வழக்கில் மூவருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளான ஊவதென்னே சுமன தேரர் மற்றும் உவமஹவலதென்னே சுமேத தேரர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடத்திச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கில் ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.