சுவிசின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாள்!!!
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத வலியாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2020 திங்கள் அன்று சுவிசின் பல பாகங்களிலும் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து கடைப்பிடிக்கப்பட்டது.
கொரோனாத் தொற்றானது உலகப்பேரிடராக மாறிநிற்கும் இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாளானது எமது மக்களின் தேசிய உணர்வையும், இல்டசியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.