November 21, 2024

கோட்டா கொலையை மறைக்கவே தடைகள்:சிவி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவேந்தல் மே 18 நினைவேந்தல் நாளில், உயிரிழந்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி, வல்வை சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்திலும், வல்வை பாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் அவர்களது ஏற்ப்பாட்டில் குறித்த ஆத்மசாந்தி பூசை இன்று மாலை 06:மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன், இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலை தடுத்த இராணுவம் பொலிஸார் அதற்குப் பல காரங்களை சொன்னார்கள், ஆனால் 2009 ம் ஆண்டு இந்தப் போரை நடத்தியவர் இப்போதைய ஜனாதிபதி கோட்டா.
அவற்றை மறைக்கவே இவ்வாறான தடைகளை ஏற்படுத்தினர், அவரது உள்ளத்தில் சில பிரச்சுனைகள் இருப்பதை உணர்கின்றேன், இதனை செய்யவிடாது தடுக்கிறார்கள் என்றால் எம் மீது எங்வளவான வெறுப்பில் உள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. இதே நேரம் அவர்கள் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என தெரிவித்தார்.