November 22, 2024

அமெரிக்காவின் மருத்துவ ஆராட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவிய சீனா!

கொரோனா வைரஸ் COVID-19 தடுப்புமருந்துக்கான தகவல்களையும் சிகிச்சைமுறைகளையும் சீனா ஊடுருவ முயல்வதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா நோய்ப் பரவல் தொடர்பில், வாஷிங்டனுக்கும், பெய்ச்சிங்கிற்கும் இடையே பூசல் அதிகரித்து வரும் வேளையில், கிருமித்தொற்றுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடும் அமைப்புகளுக்குள் சீனாவால் ஊடுருவப்படலாம் என எச்சரிக்கப்பட்டது.
சீன அரசாங்க ஆதரவு ஊடுருவிகள், COVID-19 ஆராய்ச்சியுடன் தொடர்புடைய அறிவுச் சொத்துகள், தடுப்புமருந்து, சிகிச்சை முறைகள், சோதனை முறைகள் ஆகியன குறித்த பொதுச் சுகாதாரத் தகவல்களை ஊடுருவ முயல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிருமித்தொற்றுக்கு எதிரான அமெரிக்காவின் போராட்டத்திற்கு சீனாவின் ஊடுருவல் முயற்சிகள்,அச்சுறுத்தலாய் இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
எனினும் அமெரிக்கா, ஊடுருவலுக்கான ஆதாரம் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.