பொதுமக்கள் இல்லை:கடற்படை மட்டுமே?
தென்னிலங்கையில் பொதுமக்கள் கொரோனா தொற்றிற்குள்ளாவது பற்றிய அறிக்கைகள் நின்று போயுள்ளன.புதிய சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டதன் பின்னராக அறிக்கைகளில் விபரங்கள் குறைவடைந்துள்ளன.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (13) இனங்காணப்பட்ட 26 பேரும் வெலிசர கடற்படை முகாமைச் சேந்தவர்களென, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை இனங்காணப்பட்ட 915 தொற்றாளர்களில் 498 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 150 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.