November 22, 2024

யூன், யூலையில் பிரித்தானியா வழமைக்கு திரும்பும் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை

பிரித்தானியாவின் முடக்க நிலை தளர்த்துவது குறித்து பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களுக்கு விளக்கம்
அளித்துள்ளார். யூன், யூலையில் படிப்படியாக பிரித்தானியா வழமைக்கு திரும்பும் போரிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவர் முடக்க நிலை தளர்த்துவது குறித்து மேலும் தெரிவிக்கையில்:-

உடனடியாக முடக்க நிலையைத் தளர்த்த முடியாது. மக்கள் தொடர்ந்தும் வீட்டிலேயே இருக்க வேண்டும். இங்கிலாந்தில் உள்ள பள்ளிகள், கடைகள் மற்றும் ஆரம்ப பள்ளிகள் ஜூன் முதல் மீண்டும் திறக்கப்படுவதையும் சில கோப்பிக் கடைகள் அல்லது உணவகங்கள் ஜூலை முதல் திறக்கப்படுவதையும் காணலாம் என்றார்.

குடும்ப உறுப்பினர் பூங்காக்களுக்குச் சென்று அமரவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் உரையாடவும் அனுமதிக்கப்படுவார்கள். தனிநபர்கள் சந்தித்து உரையாடவும் அனுமதிக்கபடுகின்றனர். ஆனால் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் வெளிபுறத்தில் உடற்பயிற்சிகள், ஆறுகளில் குளிக்கவும், டெனிஸ், கோல்வ் போன்ற விளையாட்டுக்களை விளையாடவும் அனுமதிக்கபடுகின்றர்.

ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸின் விதிகள் வித்தியாசமாக இருக்கும்,

அடுத்த ஆண்டு தேர்வுக்கு காத்திருக்கும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காலம் முடிவதற்குள் தங்கள் ஆசிரியர்களைப் பார்க்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும், ஆனால் மற்ற இரண்டாம் நிலை மாணவர்கள் அடுத்த பள்ளி ஆண்டுக்கு முன்னர் பள்ளிக்கு திரும்புவதற்கான எந்த திட்டமும் இல்லை.

வீட்டில் வேலை செய்ய முடியாத மக்கள், சமூக இடைவெளியுடன் பணிபுரிய மீண்டும் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் போரிஸ் ஜோன்சன் ஜான்சன் மேலும் நிலைமைகளை நாட்டு மக்களுக்க உரையாற்றினார்.