எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய முடக்கநிலையில் தளர்வுகள்?
கொரோனா தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட பிரித்தானியாவில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை சில நடவடிக்கைகளைத்
தளர்த்தப்படும் எனம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
பிரதமர் போரிஸ் ஜான்சன் நடைமுறையில் உள்ள முடக்க நிலை குறித்து தனது அமைச்சரவையுடன் மதிப்பாய்வு செய்வார். அதன் பின்னர் சில விதிகளை திங்கள்கிழமை முதல் தளர்த்தலாம் என்பதை பரிந்துரைப்பார். முடக்கநிலை குறித்த பரித்துரைகளை பிரதமர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது வெளிப்படுத்துவார் என நம்பப்படுகின்றது.
அமைச்சர்களும் நாட்டில் பொருளாதார நிலைமைய மீண்டும் ஆரம்பிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
1. மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிப்பது.
2. உடற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பது.
3. மக்கள் முடிந்தால் மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு ஊக்கம் அளிப்பது.
போன்ற விடயங்கள் அமையலாம்.
ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை தனியான அதிகாரத்தைக் கொண்டுள்ளன. எனவே அவர்களின் கட்டுப்பாடுகள் வேறு விதத்தில் அமையக்கூடும் எனக் கூறப்படுகிறது.