November 21, 2024

ரஷ்யாவின் புதிய ஸ்கிஃப் ஏவுகணை! கலக்கத்தில் மேற்குலகம்!

அணு சக்தியில் இயங்கக்கூடிய ஸ்கிஃப் ஏவுகணையை உருவாக்கியுள்ளது ரஷ்யா. இது ரஷ்யாவின் மிகப் பொிய பலம் வாய்ந்த வெடிகுண்டு என மேற்கு
ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

தரை மற்றும் கடலில் இருந்து தொலைதூர இலக்குகளை தாக்கி அளிக்கும் ஒரு ஒரு ஸ்லீப்பர் ஆயுதம் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது இவ் ஏவுகணை கடலில் உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு இடையே போர் வெடித்தால் கடைசி முயற்சியாக ரஷ்யாவால் பயன்படுத்த தயாராக உள்ளது என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்கிஃப் ஏவுகணை 6,000 மைல் தூரத்தைக் 60 மைல் வேகத்தில் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கக்கூடியது. இந்த ஏவுகணை கோபால்ட்-60 என்ற செயற்கைக் கதிரியக்கத்தால் கடல் மற்றும் கரையில் பெரிய பகுதிகளை மாசுபடுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

25 மீற்றர் கொண்ட 100 தொண் எடையைக் கொண்ட ஸ்கிஃப் ஏவுகணை தாக்குதலுக்காக பல வருடங்கள் காத்திருக்க முடியும் என்றும் அது கடல் படுக்கையில் 3000 அடியில் படுத்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்ஏவுகணையின் உருவாக்கம் ரஷ்யாவை இந்த உலகத்தால் தோற்கடிக்க முடியாது என்ற செய்தியை மறைமுகமாக ரஷ்யா கூறியிருப்பாதாக பாதுகாப்பு நிபுணர்களை கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரஷ்யாவின் இன்னொரு ஏவுகணையான சுனாமி மேக்கர் என்று அழைக்கப்படும் போஸிடான் ட்ரோனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு என்று முதலில் வல்லுநர்கள் கண்டறிந்தனர். ஆனால் இப்போது அது ஸ்கிஃப் என்று நம்பப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 8 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.