சீனாவில் மீண்டும் பரவி வரும் ஆபத்து..!!
சீனாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 981 -ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி எதுவும் வெளிப்படாமல் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நோய் பரவலை தடுக்க மிகத் தீவிரக் கண்காணிப்பில் சீனா இறங்கியுள்ளது.
நேற்று மட்டும் அவ்வாறு 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தகைய பிரிவின்கீழ் மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது. இதில் 115 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் .
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அறிகுறி வெளிப்படாதவர்களின் வழியாக, பலருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தீவிரமான பரிசோதனையை சீன அரசு முடுக்கியுள்ளது.
கரோனா வைரஸின் மையமான ஹூபே மகாணத்தில் இதுவரையில் 68,128 பேருக்கும், அதன் தலைநகர் வுஹானில் 50,333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு இடங்களிலும் 631 பேருக்கு அறிகுறி எதுவும் வெளிப்படாமல் நோய்த் தொற்று இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.