வார்த்தை தவறிவிட்டீர்:சீற்றத்தில் முன்னணி!
ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள், உத்தரவாதங்கள் மீறப்பட்டமை தொடர்பில் தமிழ் சிவில் அமைப்புக்கள் சீற்றம் கொண்டுள்ளன.
தமிழ் தேசியத்தை முன்னிறுத்திப் போட்டிபோடும் வேட்பாளர் அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிபோடக்கூடாது. தமிழ் தேசியத்தின் அடையாளமாக முன்நிறுத்தப்படும் சங்குசின்னமும் எதிர்வரும் காலங்களில் பாவிக்கப்படக்கூடாதென கட்சிகள் மற்றும் பெர்துக்கட்டமைப்புக்கள் தீர்மானித்திருந்தன.
ஆனால், அந்த ஒப்பந்தத்தை மிறி, எந்தவித தர்மமோ தார்மீகமோ இல்லாமல் தமிழ் மக்களின் பொதுச்சின்னமாக ஜனாதிபதி தேர்தலில் அடையாளப்படுத்தப்பட்ட சங்கு சின்னத்தை ஒரு தரப்பு களவாடிவிட்டதாக கோபம் வெளியிட்டுள்ளன தமிழ் சிவில் அமைப்புக்கள்.
இதனிடையே சங்குச் சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமென்ற வாக்குறுதி காற்றில் பறந்தது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ தெரிவித்துள்ளார்.
சங்குச் சின்னம் தனியொரு கட்சியின் சின்னமாகிவிட்டது. எங்கள் முடிவுகள் கொள்கையின் பாற்பட்டதே தவிர மதுபான அனுமதிப்பத்திரங்களையோ வேறு சலுகைகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது.
அவ்வகையில் முன்னணிக்கு அளிக்கும் வாக்குகளே தமிழினத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் என ஊடக அறிக்கை கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.