ஜனாதிபதியை சந்தித்த ஶ்ரீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். ஸ்ரீதரன், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.