ஆளுநர்கள் கதிரைகளை கைவிட்டு புறப்பட்டுள்ளனர்?

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர பொறுப்பேற்கவுள்ள நிலையில் ரணில் ஆதரவு ஆளுநர்கள் வீடு செல்ல தொடங்கியுள்ளனர்.
அவ்வகையில் தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவி விலகினார். புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுககள் காரணமாக தான் பதவி விலகியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக புதியவர்களை பொறுப்பேற்கும் சந்தரப்பங்களில் ஆளுநர்களாக புதியவர்களும் பொறுப்பேற்வது வழமையாகும்.