September 19, 2024

வாக்களித்த பின்னர் ஊரடங்கு!

தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் ஊரடங்கை பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் இவர்களுக்கு  தேவையான நேரத்தில் உதவுவதற்கு பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை அறிவிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert