வடமாகாணத்தில் அமைதி:அச்சத்தில் தெற்கு!
வடமாகாணம் தேர்தல் நடத்தப்படாத பிரதேசம் போன்று முற்றாக அமைதியாக இருக்கின்றது.அமைதியான நீர்த்தேக்கத்தின் ஆழம் அதிகம் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையின் ஏனைய மாகாணங்களில் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சமூக ஊடகங்களில் ஜனாதிபதி தேர்தல் தபால் வாக்குச் சீட்டின் படம் வெளியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்களிப்பில் வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, மேலும் கருத்து வெளியிடுகையில் தபால் மூல வாக்குச் சீட்டை வெளியிட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.முல்லைதீவில் பாடசாலை அதிபர் ஒருவரே தபால் மூல வாக்கு சீட்டை புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
அதுபோன்ற போக்கை தடுக்கும் வகையில், செப்டம்பர் 21-ம் திகதி வாக்குச் சாவடிகளுக்கு கையடக்கத் தாலைபேசிகளை கொண்டு செல்ல ஆணைக்குழு தடை விதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.