யாழில் மாவையே சந்தித்த ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டு “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணிகளில் கலந்து கொண்ட பின்னர் காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தனது இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா அன்புடன் வரவேற்றார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா,
ஜனாதிபதியுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள்,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.