September 19, 2024

யாழ் – கீரிமலை பழமை வாய்ந்த ஆலயம்: 30 வருடங்களுக்கு பின் வழிபாடுகளுக்கு அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று (16) வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முதல் ஒவ்லொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை (Keerimalai) கிருஸ்ணர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்திற்க்கு நிர்வாகத்தினரும் மக்களும் இன்று (16) செல்லவுள்ள நிலையில் பொங்கல் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் எதிர்வரும் வாரங்களிலும் ஒவ்வொறு வெள்ளிக் கிழமைகளிலும் வழிபாடுகளுக்கு மக்கள் செல்லமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert