நல்லூர் கொடியேற்றம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை மஞ்சத்திருவிழாவும், 25 ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 26 ஆம் திகதி மாலை கார்த்திகை உற்சவமும், 27 ஆம் திகதி காலை சூர்யோற்சவமும், 28 ஆம் திகதி காலை சந்தானகோபலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை கைலாசவாகனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
அத்துடன், 29 ஆம் திகதி காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை வேல்விமானம் (தங்கரதம்), 30 ஆம் திகதி காலை தெண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை ஒருமுக உற்சவமும், 31 ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், 01 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 02 ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும், அன்றைய தினம் மாலை கொடியிறக்கமும், 03 ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.