April 3, 2025

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – யாழில் முன்னணி துண்டுபிரசுரம்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்ககோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வுவொன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி புறநகர் பகுதிகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறினர்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் நிறுத்துவதோ அல்லது பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை தெரிவு செய்வதில் எவ்வித பயனும், இல்லை என தெரிவித்த செல்வராஜா கஜேந்திரன் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு தீர்வு எனவும் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert