Dezember 3, 2024

மோடி வருவாரா? மாட்டாரா??

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து டெல்லியில் உள்ள

 இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் மோடியின்

 இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது .

எனினும் திட்டமிட்டபடி வருகை தரும் மோடி 10இற்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert