November 21, 2024

பொது வேட்பாளருக்கு ஆதரவு:தற்போது வரை 12!

தொடர்ச்சியான அரசியல் ஏமாற்றங்களைச் சந்தித்துள்ள வடக்கு கிழக்கில், ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்ப் பொதுவேட்பாளரொருவர் நியமிக்கப்பட்டால், அதை தாம் வரவேற்பதாக, இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் பொதுவேட்பாளர் விடயம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசாங்க பொது ஊழியர்கள் சங்க அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சஷ,பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழில் முயற்சியாளர் தம்மிக்க பெரேரா,  பாவனையாளர் அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொசான் ரணசிங்க, வலஹங்குனவேவே மிஹிந்தலை ரஜமஹா விஹாரையைச் சேர்ந்த தம்மரதன தேரர் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அது தவிர, வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரும் முன்னணியில் உள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளர் ஒருவரும் போட்டியிடவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert