ரணிலை முந்தியவர்?
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் 21ம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. ஓகஸ்ட் 15ஆம் தேதி வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் திகதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்க அச்சக திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டுள்ளது
இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது
இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன கட்டுப்பணத்தை வெள்ளிக்கிழமை (26) காலை செலுத்தினார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை சமர்ப்பித்த முதலாவது வேட்பாளர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.