மலையக காணிகளையும் விடுவிக்க மறுக்கும் ரணில் அரசுதூயவன் Monday, July 22, 2024 மலையகம்
இலங்கைத் தரப்பிலிருந்து காணிகள் விடுவிக்கப்படாமையின் காரணமாகவே, இந்திய வீடமைப்பு திட்டம் தாமதமடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அதன்போது பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் தங்களது தரப்பு கேள்வி எழுப்பியதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டார்