November 21, 2024

2700 நாட்களை தாண்டிய போராட்டம்!

போரின் போதும் 2009 இன் பின்னரான சூழலிலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டறிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் 2700 நாட்களைக் கடந்துள்ளது.

நீதி கோரி 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், 2700 நாட்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 13ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

போரின் கடைசி தருணங்களில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த பின்னர் மற்றும் போரின் கடைசி தருணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கி 2017ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள்; ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதனிடையே போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் கோரிக்கையின் பேரில் வடகிழக்கு தமிழ் மக்களது வாக்குகள் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert