சஜித்துடனும் பேச்சு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவை பேணிவரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை எதிர்கட்சி தலைவர் சஜித் நேரில் சந்தித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதனின் மன்னார் அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை (15) விஜயம் செய்து பேச்சக்களை நடாத்தியுள்ளார்.
இதனிடையே தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து கூட்டமைப்பாக போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
ஆனால் வீட்டுச்சின்னம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அதுவெளியில் வருவதே சந்தேகம் எனவும் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிந்துள்ளதன் காரணமாக நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவியை செல்வம் அடைக்கலநாதனுக்கு வழங்கமுடியாது என்ற வகையில் சிலர் பேசி வருகின்றனர்.ஆனால் கட்சி செயற்பாடுகளுக்கும் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் பதவிக்கும் தொடர்பு இல்லை.அதனாலேயே சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதனை நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளதாகவும் கருணாகரம் தெரிவித்துள்ளார்.