November 21, 2024

யாழ் போதனாவில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ((Bone Marrow Transplant Unit)) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் இதுவரை காணப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது.

இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலை அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும்.

இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான விடயங்களை கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு விஷேட படுக்கை அறைகளை கொண்டுள்ளது. எனவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும். 

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிகிச்சை பிரிவு சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரனவால் எதிர்வரும் கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert