Dezember 3, 2024

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை 

யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக சுகாதார அமைச்சு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah Kajendran) கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(09) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாவகச்சேரி வைத்தியசாலையை சிறந்த முறையிலே இயக்கி அந்த மக்களுக்கு தேவைப்படுகின்ற மருத்துவ சேவையை அங்கேயே பெற்றுக்கொள்வதற்கான சுழலை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”யாழில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் ஒன்று நிலவி வருகின்றது.

குறிப்பாக யாழில் நேற்றைய தினம்(08) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1000 க்கும் மேற்பட்ட மக்கள் வீதியை மறித்து பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக பல விடங்களை அம்பலப்படுத்தியிருந்தார்.

அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே பொதுமக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பொதுமக்கள் ”சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் அங்கு பல்வேறு ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும், குற்றம் சுமத்தியிருந்தனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert