கொக்கிளாய் புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!
சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மூன்றாம் கட்டமாக நேற்று வியாழக்கிழமை (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 2023 ஆம் ஆண்டு ஆனி மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அகழ்வு பணியினை நடாத்த நிதி கிடைக்கபெற்றதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்; நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று வியாழக்கிழமை முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்று கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, பேராசிரியர் ராஜ் சோமதேவ, காணாமல் போனோர் பணியக தலைவர் உள்ளிட்ட சட்டத்தரணிகள், முன்னிலையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது