November 21, 2024

தமிழீழம் தீர்வு என்பதை வழியுறுத்தி நடைபெற்ற உரிமைக்காக எழுதமிழா மாபெரும்போராட்டம்

நேற்று 24.06.2024  திங்கள்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’  உரிமைமுழக்கப் போராட்டம்  பேரெழுச்சியுடன் ஆரம்பமாகியது    இப்போராட்டமனது பெல்சியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறுகிறது   குறித்த   போராட்டத்தில் தமிழ் மக்கள் பேரலையென ஒன்றுதிரண்டு    தமிழர்களுக்கு தமிழீழம் மட்டுமே தேவை என்று சர்வதேசத்திடம்    எடுத்தியம்பினார்கள் .

இந்நிலையில்   இப்போராட்டத்தின்  அடுத்த கட்ட   நிகழ்வுகள்    பொதுச்சுடர்  ஏற்றப்பட்டதுடன்  பெல்சியம் நாட்டின் கொடி  அந்நாட்டின்  கொடி வணக்கப்பாடலுடன் ஏற்பட்டது  இதே நேரம் தமிழீழத் திருநாட்டின் கொடியும்  தமிழீழத் தேசியக்கொடி   வணக்கப்பாடலுடன் ஒலிக்கப்பட்டு  ஏற்றிவைக்கப்பட்டது 

தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல்   ஏற்றிவைக்கப்பட்டு ,மலர் மாலை  அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலர்வணக்கம் செய்யப்பட்டது .​

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert