நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமியை வந்தடைந்து சீனாவின் விண்கலம்

சீனாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலவை ஆய்வு செய்ய Chang’e 6 விண்கலம் மீண்டும் சீனா – மொங்கோலிய எல்லைப் பகுதியில் உள்ள புல்வெளியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
நிலவின் பெரிய அளவில் ஆராயப்படாத தொலைதூரப் பக்கத்திலிருந்து , பூமியிலிருந்து பார்க்க முடியாத பக்கத்திலிருந்து பாறை மற்றும் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட முதல் மாதிரிகளைத் எடுத்துக்கொண்டு இந்த விண்கலம் பூமியை வந்தடைந்தது. மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக பெய்ஜிங்கிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
Chang’e 6 லூனார் ஆய்வுப் பணி முழுமையான வெற்றியைப் பெற்றதாக நான் இப்போது அறிவிக்கிறேன் என்று சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பின் இயக்குனர் ஜாங் கெஜியன் அறிவித்தார்.
சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங், Chang’e-6 குழுவிற்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார், இந்த பணி „விண்வெளி மற்றும் தொழில்நுட்ப சக்தியாக மாறுவதற்கான நமது நாட்டின் முயற்சிகளில் ஒரு முக்கிய சாதனை“ என்று கூறினார்.
நிலவின் தொலைவில் மலைகள் மற்றும் பள்ளங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அதேசமயம் பூமியிலிருந்து தெரியும் பக்கம் ஒப்பீட்டளவில் தட்டையானது.
கடந்த யுஎஸ் மற்றும் சோவியத் நிலவு தரையிறங்கும் பயணங்கள் சந்திரனின் அருகில் இருந்து மாதிரிகளை ஏற்கனவே சேகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.