சாம்:தனியே தன்னந்தனியே!
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுடன் தனித்தனியே பேசப்போவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுவதாகவும் மன்னாரில் வைத்து ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்;.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறவுள்ளதால், வாக்குப்பெட்டிகள் தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்கள் கிடைத்தவுடன், வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட ஏராளமான வாக்குப்பெட்டிகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை அரசு தொழிற்சாலைக்கு அனுப்பி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.