தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்க விரும்பம்?
தமிழ் அரசியல் பரப்பில் ஒதுக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் அமைப்பின் செயலாளர் அனந்தி சசிதரனும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக விருப்பத்தை வெளியிட்pடுள்ளார்.
வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டன.
இந்நிலையில் இதுவரை மௌனமாக இருந்து வந்திருந்த அனந்தி சசிதரன் தான் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என்று அறிவித்துள்ளார்.
எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் எவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட கூடாதென்ற நிலைப்பாட்டின் பிரகாரமே சிவில் அமைப்புக்களின் கூட்டணியான தமிழ் மக்கள் சபை கலந்துரையாடல்களை நடத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.