மைத்திரிக்கு வந்த சோதனை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (12) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தடை உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.