கனடா திரும்பிய தமிழீழ வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு.

கொனீபா (CONIFA) மகளிர் உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டி 2024 தொடரில் பங்குபற்றிய தமிழீழ அணியில் கனடாவிலிருந்து நோர்வே சென்று விளையாடிவிட்டு (10.06.2024) கனடா திரும்பிய வீராங்கனைகளையும் அவர்களிற்கு உடனிருந்து பணியாற்றிய சங்கரி, அபி ஆகிய இளையோரையும் ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வரவேற்றனர் கனடா விளையாட்டுத்துறை பொறுப்பாளர் காந்தன் அண்ணா, செயற்பாட்டாளர் திரு அண்ணா, பெற்றோர், உறவுகள் நண்பர்கள் மற்றும் கனடியத் தமிழ் வானொலியும் சென்று வரவேற்றது.
தமிழீழ பெயர் பொறித்த உடையோடு துள்ளி வந்த எங்கள் புலிக் குட்டிகளை பூங்கொத்து வழங்கி வாழ்த்தி வரவேற்றதோடு இதர தமிழீழ வீராங்கனைகள் பற்றியும் போட்டி, மற்றும் அனுபவங்கள் பற்றியும் மகிழ்வோடு அளவளவியதில் பெரும் மகிழ்ச்சி!