பேரம் பேசுவது தமிழ் மக்களா?சுமந்திரனா?
கடந்த காலங்களை போன்றே இம்முறையும் தமிழர்களது வாக்குகளை பேரம்பேச பயன்படுத்த வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழர்களா அல்லது தானா பேரம் பேச பயன்படுத்துவதென எதுவும் அவர் தெரிவித்திருக்கவில்லை.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுடைய வாக்குகளை தீர்மானம்மிக்க வாக்குகளாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2005 இல் இடம்பெற்ற தேர்தலில் வாக்குகளை புறக்கணித்திருந்த நிலையில் அதன் விளைவுகளை சந்தித்திருந்தோம்.
மற்றவர்கள் மூன்றாகப் பிரிந்து இருக்கிற போது நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக எங்களுடைய வாக்கை திரட்ட முடியும்.
2010ஆம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய மக்கள் 3 இலட்சம் பேருக்கு அண்மித்ததாக முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கிற பொழுது கூட வாக்களித்தார்கள்.
அதன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வாக்கைவிட போரில் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மடங்கு வாக்குகள் கொடுத்தார்கள்.
அடுத்த தடவை மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொன்னபோது எங்களுடைய மக்கள் வாக்களித்தார்கள்.
அதனால் எங்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டது.அக்காலகட்டத்தில் தான் எங்களுடைய பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது. அது எங்களுடைய இருப்புக்கு அத்தியாவசியமானது. எங்களுடைய சுயநிர்ணய உரிமை என்று நாங்கள் சொல்லுவதற்கு அடிப்படையானது.
அதேபோன்று ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சியும் நடந்தது. ஆனால் அது நிறைவு பெறவில்லை. இந்நிலையில், அடுத்த தேர்தலில் மக்கள் தாங்கள் தீர்மானமாக வாக்குகளை அளித்திருந்தார்கள்” என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்