எதிரிக்கு எதிரி நண்பன்!
எதிரிக்கு எதிரி நண்பன் கருத்து உள்ளடக்கத்துடன் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் என்ற சுமந்திரனின் கூட்டத்தில் சந்திரகுமாரிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது..
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அரசியல் போட்டியாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சந்திரகுமாரிற்கு சுமந்திரனின் நிகழ்வில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டால் அதற்கு எதிரான கடுமையான பிரச்சாரம் செய்யவேண்டும். அதனை தோற்கடிக்க வேண்டும். இது யாரோ ஒருவருடைய கோமாளிக்கூத்து என்பதை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். துரோகிப்பட்டத்திற்கு பயந்து ஓடக்கூடாது என – எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற மக்கள் மன்றம் கலந்துரையாடல் எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தைசெல்வா கலையரங்கில் இடம்பெற்றது.
அதேவேளை பலமான தலைவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக மதகுருமார்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கட்டமைப்பிலும் மதகுரு முன்னிலைப்படுத்தப்படுகிறார். பொது வேட்பாளர் என்றதும் மதகுரு ஒருவரின் பெயரே முன்னிலைப்படுத்தப்பட்டதென கேசவன் சயந்தன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.