Dezember 3, 2024

இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த சிறீதரன் எம்.பி

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு(Narendra modi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(Sritharan) வாழ்த்துரைத்துள்ளார்.

பாரதத்தின் அரசியல், பொருளாதார, சமூக நலன் சார்ந்து தாங்கள் ஆற்றவிருக்கும் பணிகளின் விளிம்பில், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே இழையோடியிருக்கும் உறவின் கனதியை உயிர்ப்பிக்க வேண்டிய காலக்கடமையும் தங்களிடத்தே தரப்பட்டிருப்பதாக நாம் உணருகிறோம்.

narendra modi resignation news

இதுதொடர்பிலான அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தாங்கள் இந்திய மக்களின் மன உணர்வுகளை வென்றிருப்பதன் பிரதிபலிப்பாகவே மக்களவைத் தேர்தலில் பெற்றிருக்கும் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert