November 21, 2024

210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்; விசேட வர்த்தமானி அறிவித்தல்

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா,  இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert