தேர்தல் :இறுதி சுற்று ரணில்-மகிந்த பேச்சு!
ஜனாதிபதி தேர்தலை எப்பொழுது நடாத்துவதென்ற முனைப்பின் மத்தியில் தெற்கில் ஏற்பட்ட காலநிலை குழப்பத்தை முன்னிறுத்தி தேர்தலை பிற்போடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ரணில் – மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.