ரணிலுடன் மும்முரம்:நேரமில்லை!
ரணிலை வரவேற்பதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்மரமாகியுள்ள நிலையில் மீனவ பிரச்சனைகளை கிடப்பில் போட்டுள்ளனர்.
வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டு வரப்படவுள்ள மீன்பிடி சட்டதிருத்த வரைபு சம்பந்தமாக வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (25) நடைபெற்றது.
வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது 10 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. வடமாகாணத்தின் நான்கு மாவட்ட மீனவ பிரதிநிதிகளும் தமது மாவட்டம் சார்ந்த பிரசினைகளை முன்வைத்தனர்.
தொடர்சியாக தமது பிரச்சினைகளை தமது சார்பில் நாடாளுமன்றில் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவ பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் எவரும் எட்டிப்பார்த்திருக்கவில்லை