November 22, 2024

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இந்த  6 ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் விரும்பி இரண்டு ஜனாதிபதிகளை கொண்டு வந்திருந்தோம். அவர்கள் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எங்களது இனப்பெருச்சினை தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை. 

இன்னும் இன்னும் நாங்கள் இந்த சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை நாங்கள் காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. 

 வடகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் நலன் விரும்பிகள் என  நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், எந்த ஒரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கு மேலே வாக்கெடுத்து வெல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என்கின்ற நேரத்திலே சில வேளைகளில் எங்களுடன் பேசலாம்.

அதனால் ஒரு பொது வேட்பாளர் தற்போதைய நிலைமையில் தேவை பாடாக இருக்கின்றது அந்த வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் வந்திருக்கின்றன

தமிழர் இலங்கை தமிழரசி கட்சி பொது வேட்பாளர் தொடர்பில் தங்களுக்குள்  ஒரு முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டிருக்கின்றார்கள். அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன் இந்த வகையில் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert