November 21, 2024

முல்லைத்தீவில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தள்ளார்.

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் கூடுதலான நிலப்பரப்பினை ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து அவற்றில் சிங்கள மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின் ஒரு இலட்சத்தி 67 ஆயிரத்தி 484 ஏக்கர் அதாவது முல்லைத்தீவின் 30.37 வீதமான காணிகளை வன இலாகா மட்டும் வைத்திருக்கின்றது.

இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 42631 ஏக்கர் காணி அதாவது 7.15 வீதமான காணிகள் அபகரித்து வைத்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert