அழைத்தே வந்தேன்:சுமா!
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் முன்னராகவே பரபரப்பாகியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் முனைப்பாகியுள்ளனர்.
ஜேவிபியின் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரச்சார கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக எம்.ஏ.சுமந்திரன் வந்திருந்ததாக யாழ்.மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் முன்வைத்த குற்றச்சாட்டை எம்.ஏ.சுமந்திரன் மறுதலித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார தொலைபேசி வழியே மூன்று தடவைகளாக விடுத்த அழைப்பினையடுத்தே தான் கூட்டத்திற்கு வருகை தந்திருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு தவிர்ந்த புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் பேராசிரியர் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக, பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்.ஜனாதிபதி தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிப்பதில் அவர் உட்பட பலருக்குப் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூறியுள்ளனர்.அவர் மொட்டுக் கட்சியின் கீழ் போட்டியிடுவது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள எமக்கும் பிரச்சினை உள்ளது.எனவே ரணில் விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, பேராசிரியரான மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.