இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு யேர்மனி உடந்தை: விசாரணைகள் ஆரம்பம்!!
யேர்மனியால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆயுத விற்பனையை நிறுத்துமாறு நிகரகுவா ஐ.நா.வின் உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போர்க் குற்றங்களுக்கு யேர்மனி உடந்தையாக இருக்கிறது என நிகரகுவாவினால் குற்றம் சாட்டப்பட்டது.
யேர்மனி ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலைக்கான விதிமுறை மீறி இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுத தளபாடங்கைள அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுக்களை யேர்மனி நிராகரிக்கிறது. இன்று செய்வாய்கிழமை இதற்கான விசாரணைகள் சர்வதேச நீதிமன்றில் ஆரம்பமாகின.
2023 ஆம் ஆண்டும் 30 விழுக்காடு இராணுவ தளபாடங்களை யேர்மனியிடம் இருந்து இஸ்ஈரல் வாக்கியது. குறிப்பாக 300 மில்லியன் யூரோக்களுக்கு இந்த இராணுவ தளபாடக் கொள்வனவு நடந்தது. இது 2022 ஆம் ஆண்டை விட 10 மடங்கு அதிகமாகும்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களுக்கான கூறுகள் விற்பனை யேர்மனி விற்பனை செய்துள்ளது.
நாங்கள் அமைதியாக இருக்கிறோம், நீதிமன்றத்தில் எங்கள் சட்ட நிலைப்பாட்டை நாங்கள் அமைப்போம்“ என்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செபாஸ்டியன் பிஷ்ஷர் விசாரணைக்கு முன்னதாக கூறினார்.
யேர்மனி இனப்படுகொலை மாநாட்டு விதிமுறைகளையோ அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தையோ மீறவில்லை, இதை நாங்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் விரிவாக முன்வைப்போம். நிகரகுவாவின் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று பிஷ்ஷர் மேலும் கூறினார்.