ஏவுகணை செயலிழந்ததால் கடல் போக்குவரத்தை மூடியது டென்மார்க்
டென்மார்க் கடற்படைக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை விபத்துக்கு உள்ளானதால் உலகின் பரபரப்பான கடல் பாதையில் போக்குவரத்து நேற்று வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
டென்மார்க் கடற்படையிரின் பயிற்சியின் போது ஏவுகணை ஏவுவுதற்கு தயார் நிலை செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்த ஏவுகணையை மீண்டு பழைய நிலைக்கு கொண்டுவர செயற்பாடு செய்ய முடியாத காரணத்தால் ஏவுகணை சில கிலோ மீற்றர் தொலைவுக்குச் சென்று விழும் அபாயம் இருந்தது என டென்மார்க் கடற்படை அறிவித்தது. பின்னர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விசேட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கிரேட் பெல்ட் ஜலசந்தியின் ஒரு பகுதியான வான் மற்றும் கடல் போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனுடன் இணைக்கும் கிரேட் பெல்ட் பாலத்தின் தெற்கே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிரேட் பெல்ட் ஜலசந்தி பால்டிக் கடலுக்கான நுழைவாயில் மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமானது.