November 22, 2024

ரஷ்யாவில் ஆயுததாரிகள் தாக்குதல்: 40 பேர் பலி! 100க்கு மேற்பட்டோர் காயம்!!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு புறநகரில் அமைந்துள்ள குரோகஸ் சிற்றி ஹால் இசை அரங்கில் கூடியிருந்த மக்கள் மீது ஆயுதம் தாக்கிய ஆயுததரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என  என்று ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவையை மேற்கோள்காட்டி ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

https://youtube.com/watch?v=WDBMJdITmjI%3Fsi%3DqXZ-twxrqgNRaCj7

இன்று வெள்ளிக்கிழமை தாக்குதலாளிகள் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியதோடு மேலும் வெடிபொருளையும் வெடிக்க வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிக்னிக் என்ற ராக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றிருந்த வேளை மூன்று தொடக்கம் 5 பேர் கொண்ட ஆயுததரிகளே மக்கள் மீது தாக்குதலை நடத்தினர்.

ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன் கையெறி குண்டு அல்ல தீக்குண்டை வீசியாதாக சம்பவ இடத்தில் இருந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தீ அரங்கு முழுவம் பரவியது.

துப்பாக்கிச் சூடு 15 நிமிடங்கள் தொடங்கம் 20 நிமிடங்கள் வரை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்ற தரையில் படுத்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் ஏற்கனவே மருத்துவ வசதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, ரஷ்ய தலைநகரின் வடக்கில் உள்ள க்ராஸ்னோகோர்ஸ்க் புறநகரில் உள்ள கட்டிடத்தின் மீது பெரும் கறுப்பு புகை எழுவதைக் காட்டியது. 

ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு பாதுகாப்புப் படையினர் சென்றுள்ளனர்.

இதேநேரம் ரஷ்யாவை எதிரியாக பார்க்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்குல நாடுகள் ‚குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் இத்தாக்குதலுக்கு விழுந்து விழுந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert