காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்தன!!
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்து தடுத்துள்ளன.
பணயக்கைதிகள் உடன்படிக்கையுடன் பிணைக்கப்பட்ட காசாவில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் இணைந்து தடுத்துள்ளன.
15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும், ரஷ்யா, சீனா, அல்ஜீரியா மூன்று நாடுகளும் எதிராகவும் வாக்களித்தனர். கயானாவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
வாக்கெடுப்புக் முன்னர் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக இருப்பதாக ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வசிலி நெபென்சியா கூறினார். போர் நிறுத்தத்திற்கான தார்மீக தேவைகளை விடுத்து அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தில் பணயக் கைதிகள் நிபந்தனைகளையும் ரஷ்யத் தூதுவர் கடுமையாக விமர்சித்தார். அத்துடன் ஐ.நா தீர்மானத்தில் இல்லாத தத்துவ வார்த்தைகள் என்று அழைத்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் ஆகியோர் சர்வதேச சமூகத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு முன்னர் பல நாடுகளால்கொண்டு வந்த தீர்மானங்களை அனைத்தையும் அமெரிக்கா வீட்டே செய்து தடுத்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.